டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ளவரின் சொத்துக்கள் பறிமுதல்

புத்ராஜெயா, மே.30-

டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள முக்கியப் பிரமுகர் ஒருவரின் 3 கோடியே 20 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொத்துக்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்தது.

நெடுஞ்சாலை ஒப்பந்தம் நிறுவனம் ஒன்றில் பங்குதாரராக இருக்கும் டான்ஶ்ரீ அந்தஸ்தைக் கொண்ட அந்த முக்கிய பிரமுகருக்குச் சொந்தமான தங்க ஆபரணங்கள், சொகுசுக் கார்கள், விலை உயர்ந்த கடிகாரங்கள், ரொக்கப் பணம் முதலியவற்றை எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் நெடுஞ்சாலை நிர்மாணிப்பில் முறைகேடு புரிந்துள்ளதாக அந்த டான்ஸ்ரீ மீது எஸ்பிஆர்எம் சந்தேகம் கொண்டுள்ளது. அந்த டான்ஸ்ரீக்குச் சொந்தமான கோலாலம்பூரில் உள்ள வீட்டில் எஸ்பிஆர்எம் அலசி ஆராய்ந்துள்ளது.

பென்ட்லி, மெர்சடிஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் போன்ற 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள சொகுசு வாகனங்களையும் எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தவிர, மதுபான விருந்துக்கு தனியொரு பங்களா வீட்டைக் கொண்டுள்ள அந்த டான்ஸ்ரீ வீட்டையும் எஸ்பிஆர்எம் ஆராய்ந்துள்ளது. சட்டவிரோதப் பணத்தில் சம்பாதித்தாகக் கூறப்படும் 30 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள உடமைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த வட்டாரம் மேலும் கூறியது.

WATCH OUR LATEST NEWS