நாசிக், ஜூன்.05-
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு வீட்டினுள் வேகமாக சென்ற கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கோலாப்பூர் பாட்டாவில் நடந்ததாகக் கூறப்படுகிறது.
குடும்பத்தினர் ஒருவர், நாசிக்கில் நடைபெற்ற உறவினரின் திருமண விழாவிற்குச் சென்று விட்டு, தங்களின் வீட்டிற்குத் திரும்பும் போது, அதிவேகமாகச் சென்ற கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நாசிக்-கல்வான் சாலையில் இருந்த ஒரு வீட்டிற்குள் புகுந்தது.
இதில் வீட்டில் இருந்த 4 பேர் உள்பட 5 பேர் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விரிவான விசாரணை நடந்து வருகிறது.