கைவிடப்பட்ட வாகனத்திலிருந்து 47 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருள் மீட்பு

கெரிக், ஜூன்.11-

கடந்த வெள்ளிக்கிழமை கெரிக், தாமான் பூலாய் சவானா என்ற வீடமைப்புப் பகுதிக்கு அருகில் சாலையோரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த எஸ்யுவி ரக வாகனத்திலிருந்து 47 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள 123.1 கிலோ கிராம் எடைக் கொண்ட போதைப் பொருளைப் போலீசார் மீட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து கெரிக் மாவட்ட போலீஸ் நிலையத்தின் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், ரோந்துப் போலீசாரும் அந்த வாகனத்தைச் சோதனையிட்ட போது பெரியளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் தெரிவித்தார்.

ஓட்டுநர் மற்றும் பயணிகள் இல்லாத நிலையில் அந்த ஹொண்டா எச்ஆர்வி வாகனம் பூட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. வாகனத்தைச் சோதனையிட்டதில் 80 பிளாஸ்டிக் பேக்கெட்டுகளில் போதைப் பொருள் இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இன்று ஈப்போவில் பேரா மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ நூர் இதனைத் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS