லியோ’ படத்தில் இறந்த கதாப்பாத்திரம் ‘பென்ஸ்’ படத்தில் உள்ளதா?

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் பாதையில் உருவாகி வரும் ‘பென்ஸ்’ திரைப்படம் ஒரு LCU (Lokesh Cinematic Universe) கதை அம்சம் கொண்டது என்பதை ஏற்கனவே படக்குழுவினர் உறுதி செய்திருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘லியோ’ படத்தில் உள்ள ஒரு கதாப்பாத்திரம் ‘பென்ஸ்’ படத்தில் வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

‘லியோ’ படத்தில் விஜயின் சகோதரியாக மடோனா செபாஸ்டியன் நடித்திருந்த நிலையில், அந்த படத்தில் அவர் உயிரிழந்து விடுவார். ஆனால், மடோனா செபாஸ்டியன் கேரக்டர் ‘பென்ஸ்’ படத்தில் உயிருடன் வருவதாகவும், அவரது கேரக்டர் தான் இந்த படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் நிவின் பாலி நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மாதவன் இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும், அவர்தான் இந்த படத்தில் பிரதான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இன்னும் யார் யாரெல்லாம் நடிக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

WATCH OUR LATEST NEWS