கோலாலம்பூர், ஜூன்.25-
எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் ரோன் 97 மற்றும் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை லிட்டருக்கு 7 காசு உயர்ந்துள்ளது.
பெட்ரோல் ரோன் 97, லிட்டருக்கு 3 ரிங்கிட் 21 காசுக்கு உயர்வு கண்டுள்ளது. தீபகற்ப மலேசியாவில் டீசல் லிட்டருக்கு 2 ரிங்கிட் 88 காசுக்கு விலை உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் ரோன் 95 விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 காசுக்கு விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.