கோல சிலாங்கூர், ஜூன்.28-
சாலையோரத்தில் பிளாஸ்டிக் பேக்கில் ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இன்னும் தொள்புள் கொடி அவிழ்க்கப்படாத நிலையில் பிறந்து ஒரு வாரம் ஆகியிருக்கலாம் என்று நம்பப்படும் அந்த குழந்தை நேற்று இரவு 9 மணியளவில் கோல சிலாங்கூர், புக்கிட் ரோத்தான், கம்போங் அபி-அபியில் உள்ள ஜமிலுல் ஹூடா பள்ளிவாசலின் அருகில் உள்ள சாலையோரத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
2.13 கிலோ எடை கொண்ட அந்த ஆண் குழந்தையைக் கண்ட பொதுமக்கள், போலீசுக்குத் தகவல் கொடுத்ததாக கோல சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அஸாருடின் தஜுடின் தெரிவித்தார்.