அம்பாங், ஜூன்.29-
அம்பாங் ஜெயா, பண்டார் இண்டாவில் 13 வயது சிறுமி ஒருவரை, அவரது தாயின் காதலர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 61 வயது முதியவர் ஒருவரும் அவரது 36 வயது காதலியும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த ஆண்டு நடந்துள்ளதாகவும், அப்போது சிறுமியின் தாயும் உடனிருந்ததாகவும் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தாயின் காதலன் தன்னை மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யத் திட்டமிட்டிருப்பதை அறிந்து சிறுமி போலீசில் புகார் அளித்துள்ளார். கைதான இருவரும் ஜூலை 4ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.