காவல் துறையின் புதிய தலைவரைச் சந்தித்தார் மாமன்னர்

கோலாலம்பூர், ஜூன்.29-

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை, இன்று காவல் துறையின் புதிய தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு ஜோகூர் பாருவில் நடைபெற்றது. மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மலேசியக் காவல் துறையின் கௌரவ ஆணையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோகூர் மாநிலப் காவல் துறைத் தலைவர் டத்தோ எம் குமாரும் உடனிருந்தார். முகமட் காலிட் இஸ்மாயில், ஜூன் 20 அன்று நாட்டின் 15வது காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேனுக்குப் பதிலாகப் பதிலாகப் பொறுப்பேற்றார்.

WATCH OUR LATEST NEWS