கோத்தா கினபாலு, ஜூன்.30-
லஞ்ச ஊழல் தொடர்பில் இன்று கோத்தா கினபாலு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சபாவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் நிலை குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று மாநில முதலமைச்சர் ஹாஜிஜி நோர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான காலக் கட்டத்தில் அவர்களின் நிலை குறித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சபா, சிண்டுமின் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யுசோஃப் யாகோப், தஞ்சோங் பத்து சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அண்டி முகமட் சுர்யாடி மற்றும் ஒரு வர்த்தகரான டத்தோ அல்பெர்ட் தே ஆகியோரே குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் ஆவர்.