கோலாலம்பூர், ஜூன்.30-
சிலாங்கூர், புஞ்சாக் ஆலாமில் மஹா கிளினிக் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள கிளினிக்கில் தாம் எந்தவொரு பங்குரிமையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் பிரதமர் துன் முகாதீர் முகமது தெளிவுபடுத்தியுள்ளார்.
ஒரு மருத்துவராக தமது தொடக்கக் கால வாழ்க்கையில் மஹா கிளினிக் என்று தமது பெயரில் திறக்கப்பட்ட தனது சொந்த கிளினிக், இரண்டறக் கலந்தது என்றாலும் புஞ்சாக் ஆலாமில் திறக்கப்பட்டுள்ள கிளினிக்கில் தனது நலன் சார்ந்த அம்சங்கள் எதுவும் இல்லை என்று துன் மகாதீர் விளக்கினார்.