கிள்ளான், ஜூன்.30-
யுபிஎம் எனப்படும் மலேசிய புத்ரா பல்கலைக்கழகத்தின் சரவாக்கில் உள்ள பிந்துலு வளாகம், யுபிஎம் சரவாக் என்று மறுபெயரிடப்படும் என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷாராஃபுடின் இட்ரிஸ் ஷா அறிவித்துள்ளார்.
முன்பு சரவாக்கில் மலேசிய விவசாயப் பல்கலைக்கழகம் என்ற பெயரில் செயல்பட்ட பிந்துலு வளாகத்தின் 50 ஆண்டு கால பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, அதன் பெயர் மறுபடியும் யுபிஎம் சரவாக் என்ற பெயரில் செயல்படும்.
யுபிஎம்மின் வியூக நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக மீண்டும் அப்பெயருக்கே மாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.