கோலாலம்பூர், ஜூன்.30-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஜுலை முதல் தேதி தொடங்கி, 7 ஆம் தேதி வரை மூன்று நாடுகளுக்கு நீண்டப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
இத்தாலி, பிரான்ஸ், பிரேசில் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பிரதமரின் பயணம் அமைந்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொருளாதாரம், வர்ததகம் மற்றும் இரு வழி உறவுகளை ஊக்குவிக்கும் பொருட்டு 3 நாடுகளுக்கான பிரதமரின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.
ரோம், பாரிஸ் மற்றும் ரியோ டி ஜெனெய்ரோ ஆகிய இடங்களில் அந்நாட்டு பிரதமர்களை டத்தோஸ்ரீ அன்வார் சந்தித்துப் பேச்சு நடத்துவார். கடந்த 2024 ஆம் ஆண்டில் இரு வழி உறவில் 50.91 பில்லியன் வர்த்தகம் நடந்து இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.