புதிய தலைமை நீதிபதி உடனடியாக அறிவிக்கப்படும்

கோலாலம்பூர், ஜூன்.30-

மலேசியாவின் முதலாவது பெண் தலைமை நீதிபதி எனும் வரலாற்றுச் சிறப்புடன் நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் நாளை ஜுலை முதல் தேதி செவ்வாய்க்கிழமை பதவி ஓய்வு பெறுகிறார்.

இந்நிலையில் அடுத்த புதிய தலைமை நீதிபதி குறித்து எந்தவோர் அறிவிப்பும் வெளியிடப்படாமல் இருப்பதாக மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்துள்ளது.

நீதிபரிபாலனம், எவ்வித தொய்வின்றி, சமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு புதிய தலைமை நீதிபதியின் நியமனம் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் முகமட் எஸ்ரி அப்துல் வாஹாப் கேட்டுக் கொண்டுள்ளார்.

WATCH OUR LATEST NEWS