தீ விபத்து, மூதாட்டி கருகி மாண்டார்

கோத்தா கினபாலு, ஜூலை.01-

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் நாலாபுறமும் தீ சூழ்ந்த நிலையில், தப்பிக்க இயலாமல் மூதாட்டி ஒருவர் கருகி மாண்டார். இந்தத் துயரச் சம்பவம் நேற்று இரவு 8.20 மணியளவில் சபா, கோத்தா கினபாலு, கம்போங் மன்சியாங், ஜாலான் கோகோலில் இரண்டு மாடி தரை வீட்டில் நிகழ்ந்தது.

இதில் 72 வயது ங் சு யேன் என்பவரே மாண்டதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் அடையாளம் கூறினர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு மூன்று தீயணைப்பு வண்டிகளுடன் விரைந்த 20 வீரர்கள், தீயை அணைக்க கடுமையாகப் போராடிய போதிலும் வீடு 100 விழுக்காடு முற்றாகச் சேதமுற்றதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.

வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டியின் சடலம், புலன் விசாரணைக்கு ஏதுவாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அப்பேச்சாளர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS