பெர்மாத்தாங் பாவோ, ஜூலை.01-
மலேசிய ஊடகவியலாளர் மன்றம் அமைக்கப்பட்டது மூலம் அதன் பூர்வாங்கக் கூட்டம் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தொடர்புத்துறை அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.
மலேசிய ஊடகவியலாளர் மன்றம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்டது மூலம் அதன் வாரிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலின் மூலம் அதன் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதுவரை அமைப்புக் குழுவினர் அந்த மன்றத்தின் கூட்டத்தை வழி நடத்தி, தேவையான ஏற்பாடுகளைச் செய்வர்.
எனினும் இந்த மன்றம் முழுமையாகச் செயல்படுவதற்கு சற்றுக் கால அவகாசம் தேவைப்படுவதாக டத்தோ ஃபாமி தெரிவித்தார். காரணம் அந்த மன்றம் வழிநடத்தப்படுவதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் முறையான நிர்வாகம் தேவைப்படுகிறது என்று அவர் விளக்கினார்.