விஇபியில் பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வாகனங்களுக்கு இன்று முதல் சம்மன்

ஜோகூர் பாரு, ஜூலை.01-

மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு, விஇபி எனப்படும் வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட் விதிமுறை, இன்று ஜுலை முதல் தேதி செவ்வாய்க்கிழமை முழுமையாக அமலுக்கு வந்துள்ளது.

தங்கள் வாகனங்களை, வாகன நுழைவு அனுமதித் திட்டமான விஇபியில் பதிவு செய்யாத அல்லது செயல்படுத்தாத வெளிநாட்டு வாகன உரிமையாளர்களுக்குச் சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, சம்மன் வழங்கும் நடவடிக்கையை ஜோகூர் பாருவில் இன்று அதிகாலையில் தொடங்கியுள்ளது.

புதிய சட்டவிதி, இன்று முதல் அமலுக்கு வந்து இருப்பதால், இந்த விதியை மீறும் வெளிநாட்டு வாகனமோட்டிகளுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதத் தொகைக்குரிய சம்மனை ஜேபிஜே வெளியிட்டு வருகிறது.

விஇபியில் பதிவு செய்யாத சிங்கப்பூர் வாகனங்கள் மலேசியாவிற்குள் நுழையுமானால், அவற்றின் உரிமையாளர்கள் இந்த சம்மனைப் பெற்றுதான் ஆக வேண்டும் என்று சாலை போக்குவரத்து இலாகாவின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ரம்லி தெரிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS