ஷா ஆலாம், ஜூலை.01-
கடந்த ஏப்ரல் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு தீச் சம்பவம் தொடர்பில் புதிய ஆதாரங்கள் ஏதும் பெறப்படுமானால் விசாரணை அறிக்கையைத் திறப்பதற்கு போலீசார் எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றனர் என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.
நேற்று வெளியிடப்பட்ட விசாரணை அறிக்கையில் இந்த சம்பவத்தில் எந்தவொரு கவனக்குறைவோ அல்லது சதிநாச வேலையோ இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் இதில் சந்தேகத்திற்கு இடமாக ஏதாவது நடந்து இருப்பதாகப் போதுமான ஆதாரங்களுடன் துப்பு கிடைக்குமானால் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறக்க தயாராக உள்ளனர் என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.