சிப்பாங், ஜூலை.01-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படாமல் இருந்த ஏரோடிரேன் ரயில் சேவை இன்று ஜுலை முதல் தேதி காலை 10 மணி முதல் செயல்படத் தொடங்கியது.
கடந்த இரண்டு ஆண்டுகளான விமான நிலையத்திற்கும், விமான முனையத்திற்கும் பயணிகளைக் கொண்டுச் செல்வதற்கு பேருந்துகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் இன்று ஏரோடிரேன் ரயில் சேவை மீண்டும் தொடங்கியிருப்பது, பயணிகளை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஏரோடிரேன் ரயில் சேவையின் மூலம் பயணிகள் விமான நிலையத்திலிருந்து விமான முனையத்திற்கு 2 நிமிடத்தில் சென்றடைந்து விட முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்திற்கு மீண்டும் ஏரோடிரேன் வருகையானது, பயணிகளுக்கு மேலும் ஆக்கப்பூர்வமானச் சேவையை வழங்க முடியும் என்று விமான நிலைய நிர்வாகம் நம்புகிறது.