கோலாலம்பூர், ஜூலை.01-
முன்னாள் நிதி அமைச்சர் காலஞ்சென்ற துன் டாயிம் ஸைனுடினின் குடும்பத்திற்குச் சொந்தமான இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் அனுமதி கேட்டு செய்து கொண்டுள்ள விண்ணப்பம் மீதான விசாரணை வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியான கேஎல்சிசிக்கு அருகில் வீற்றிருக்கும் 60 மாடிகளைக் கொண்ட இல்ஹாம் டவர் கட்டடத்தைப் பறிமுதல் செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் எஸ்பிஆர்எம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அந்தக் கட்டட நிர்மாணிப்பு தொடர்பான விவரங்கள் குறிப்பாக, அதற்கான நிதி வளங்கள் எவ்வாறு பெறப்பட்டது என்பது குறித்து எஸ்பிஆர்எம்மிற்கு விளக்குவதற்கு துன் டாயிம் குடும்பத்தினர் தவறிவிட்டதாக அந்த ஊழல் தடுப்பு ஆணையம் குற்றஞ்சாட்டுகிறது.