கிள்ளான், மேருவில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கிரிமினல் கும்பல்களின் வேலையே

ஷா ஆலாம், ஜூலை,01-

கடந்த ஜுன் 20 ஆம் தேதி கிள்ளான், மேருவில் ஆடவர் ஒருவர் துப்பாக்கியினால் சுட்டுக் கொல்லப்பட்டச் சம்பவத்திற்கு பின்னணியில் கிரிமினல் கும்பல்கள் இருந்துள்ளன என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் 25 மற்றும் 40 வயதுடைய இரு நபர்கள் கிள்ளானில் கைது செய்யப்பட்டுள்ளதாக இன்று ஷா ஆலாமில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.

பிடிபட்ட இரு நபர்களும் குண்டர் கும்பலைச் சேர்ந்தர்கள் ஆவர். இரு குண்டர் கும்பல்களுக்கு இடையில் நிலவி வந்த சர்ச்சையே இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இந்தக் கும்பல்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனவா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS