பெட்ரோல் ரோன் 95 விவகாரம், இறுதிக் கட்டத்தில் உள்ளது

கோலாலம்பூர், ஜூலை.01-

இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கவிருக்கும் பெட்ரோல் ரோன் 95 மானியத்தைச் சீரமைக்கும் விவரங்களை இறுதிக் கட்டமாக உறுதிச் செய்வதில் அரசாங்கம் தற்போது தீவிர கவனம் செலுத்தி வருவதாக இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஶ்ரீ அமீர் ஹம்ஸா அஸிஸான் கூறினார்.

டீசல் விலையைச் சீரமைக்கும் திட்டத்தைப் போலவே, ரோன் 95 மானியத்தைச் சீரமைக்கும் நோக்கத்தையும், அரசாங்கத்தின் நிதிக் கசிவுகளைத் தடுப்பதையும், வணிகர்களும் செல்வந்தர்களும் தங்கள் நியாயமான பங்களிப்பை அரசாங்கத்திற்கு வழங்குவதை உறுதிச் செய்யவும் இது வகை செய்யும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

உண்மையிலேயே மானியங்கள் தேவைப்படும் மக்களுக்கு உதவித் தொகை சென்றடைவதற்கான அரசாங்கத்தின் நிதி வலிமையை வலுப்படுத்துவற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமீர் ஹம்ஸா விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS