வர்த்தகப் பெண்மணி பமேலா தொடர்ந்து தேடப்பட்டு வருகிறார்

கோலாலம்பூர், ஜூலை.02-

கடந்த ஏப்ரல் மாதம் புத்ராஜெயா எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்குச் செல்வதாக கூறி வெளியே சென்ற ஒரு வர்த்தகப் பெண்மணியான டத்தின் பமேலா லிம் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் தொடர்பில் அவரைத் தேடும் பணியைப் போலீசார் தொடர்ந்து முடுக்கி விட்டுள்ளனர் என்று கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் துணை கமிஷனர் டத்தோ முகமட் உசோஃப் தெரிவித்தார்.

அந்த வர்த்தகப் பெண்மணி காணாமல் போன தினத்திலிருந்து போலீசாரும் தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

பமேலா காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவனின் முகத் தோற்றம் வரையப்பட்டது. எனினும் அது வெறும் 40 விழுக்காடு மட்டுமே பொருந்துகிறது என்று டத்தோ முகமட் உசோஃப் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் இதுவரையில் 48 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்து இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS