பூங்காக்கள் மற்றும் கடற்கரைகள் உட்பட சில பொது இடங்களில் மது அருந்துவதற்குத் தடை

ஈப்போ, ஜூலை.02-

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் குறிப்பிட்ட பூங்காக்கள், கடற்கரைகள் உட்பட சில பொது இடங்களில் மதுபானம் அருந்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்தார்.
போர்ட்டிக்சன் கடற்கரைப் பகுதியில் மதுபானம் அருந்துவதற்கு முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தவிர பொது மைதானங்கள், குழந்தைகள் விளையாட்டுத் தளங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்களில் மதுபானங்களை உட்கொள்வதைத்க் தடை செய்ய தனது தலைமையிலான மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமினுடின் தெரிவித்தார்.

மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற அதிக எண்ணிக்கையிலான புகார்களைத் தொடர்ந்து மாநில ஆட்சிக்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெளிவுபடுத்தினார்.

இந்த உத்தரவை மீறுகின்றவர்களுக்கு 2 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அவர் நினைவுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS