புத்ராஜெயா, ஜூலை.02-
நீதிபரிபாலனத் துறையில் காலியாகியுள்ள நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அரசாங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்தார்.
தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து நேற்று பணி ஓய்வு பெற்ற துன் தெங்கு மைமூன் துவான் மாட்டிற்குப் பதிலாக புதிய தலைமை நீதிபதி ஒருவரை நியமிப்பது தொடர்பில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தலைமையில் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. ஆனால், விவாதம் மிக ஆழமாக இல்லை என்று டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் துறையின் மாதாந்திரக் கூட்டத்தில் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தப் பிரச்சினை குறித்து விவாதித்து இருப்பதையும் டத்தோ ஃபாமி சுட்டிக் காட்டினார்.