பட்டர்வொர்த், ஜூலை.03-
பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லோரி ஒன்று தீப்பற்றிக் கொண்டது. இச்சம்பவம் இன்று அதிகாலை 3.40 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 123.4 ஆவது கிலோ மீட்டரில் பட்டர்வொர்த், சுங்கை டூவாவில் நிகழ்ந்தது.
கொள்கலனில் ஏற்பட்ட தீ, லோரியின் தலைப் பகுதியிலும் சிக்கி விடாமல் இருக்க, அந்த டிரெய்லர் வண்டி, தலைப் பகுதியிலிருந்து துண்டித்தது மூலம் தீ வேகமாகப் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதாக தீயணைப்பு மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
இதில் லோரியின் கொள்கலன் முற்றாகச் சேதமுற்றதாக அவர்கள் குறிப்பிட்டனர்.