கோலாலம்பூர், ஜூலை.03-
வேப் எனப்படும் மின் சிகரெட் பயன்பாட்டிற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று மேன்மை தங்கிய பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா இன்று பரிந்துரை செய்துள்ளார்.
இவ்வாறு நாடு முழுவதும் தடை செய்வது நியாயமான நடவடிக்கையாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இளைய தலைமுறையினர் மத்தியில் இந்த மின் சிகரெட், உடல் சுகாதாரத்திற்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாகும்.
இதில் தயவு தாட்சணைப் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை. நாடு முழுவதும் இந்த மின் சிகரெட்டுக்கு தடை விதிக்கப்பட்ட வேண்டும் என்று சுல்தான் அப்துல்லா வலியுறுத்தினார்.