கோலாலம்பூர், ஜூலை.04-
மலேசியாவில் பிடிபட்ட வங்காளதேச தீவிரவாதக் கும்பல், அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் மிக ரகசியமாகச் செயல்பட்டு வந்துள்ளது என்று போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இந்தக் கும்பல், மலேசியாவில் வேலை செய்யும் வங்காளதேசத் தொழிலாளர்களிடமிருந்து ஆண்டுக்கு 500 ரிங்கிட் சந்தாப் பணத்தைப் பெற்று வந்துள்ளது.
சிரியாவில் உள்ள தீவிரவாதிகளுக்கு பணம் அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு வங்காளதேசத் தொழிலாளியிடமும் இந்தக் கும்பல் வருடாந்திர சந்தாப் பணத்தைப் பெ வந்துள்ளது என்று ஐஜிபி விளக்கினார்.
மலேசியாவில் 36 வங்காளதேச தீவிரவாதிகள் பிடிப்பட்டதைத் தொடர்ந்து அதன் தொடர்பு கட்டமைப்புக் குறித்து அரச மலேசிய போலீஸ் படையின் பயங்கரவாதத் துடைத்தொழிப்புப் பிரிவு மேற்கொண்ட புலன் விசாரணையில் இது தெரிய வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.