ஷா ஆலாம், ஜூலை.04-
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி சுபாங் ஜெயா, புத்ரா ஹைட்ஸ் வீடமைப்புப் பகுதியில் ஏற்பட்ட எரிவாயு குழாய் வெடி விபத்து தொடர்பில் வரும் திங்கட்கிழமை சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பேதமில்லாமல் அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முழுமையாக விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
புத்ரா ஹைட்ஸ் தீச் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை வெளியிட்டப்பட்டதைத் தொடர்ந்து அது தொடர்பாக இந்த விளக்கமளிப்புக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.