கேரளாவில் மீண்டும் பரவத் தொடங்கிய நிபா வைரஸ்

திருவனந்தபுரம், ஜூலை.04-

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளதால் 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த மே மாதம் நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன் பின் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.

இந்நிலையில் ஜூன் 28ம் தேதி கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர், பின்னர் மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருக்கலாம் என சந்தேகிக்க்படுகிறது.

அதே வேளை மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியானது.

இதையடுத்து கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களில் சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 6 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கல்வி நிலையங்களைத் தற்காலிகமாக மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS