அடையாளக் கார்டு விண்ணப்பச் செயல்முறை மேம்படுத்தப்படும்

கோலாலம்பூர், ஜூலை.04-

அமலாக்க முகமை நேர்மை ஆணையமான இஏஐசி, பரிந்துரைத்து இருப்பதைப் போல தேசியப் பதிவு இலாகாவின் அடையாளக் கார்டு விண்ணப்பச் செயல்முறையை மேம்படுத்த உள்துறை அமைச்சு உறுதி பூண்டுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

இஏஐசியின் பரிந்துரை மற்றும் வெளிப்பாட்டை, உள்துறை அமைச்சு மதிப்பதாகவும், அந்த ஆணையம் பரிந்துரைத்ததைப் போல மக்களின் வசதிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் சைஃபுடின் விளக்கினார்.

மக்களின் விண்ணப்பங்கள் தோல்வி அடைவதற்கு சில வேளைகளில் ஆவணங்கள் போலியானவை என்பதால் அவற்றைத் தேசியப் பதிவு இலாகா நிராகரித்து இருப்பதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.

அதே வேளையில் மகப்பேறு மருத்துவமனையில் உண்மையிலேயே அத்தகையப் பிறப்புப் பதிவு செய்யப்படாத நிலையில் பிறப்புச் சான்றிதழ் பெறுவதற்கு அது போலி ஆவணங்களைத் தயார்படுத்திக் கொடுத்து இருப்பதையும் சைஃபுடின் சுட்டிக் காட்டினார்.

நம்பகத்தன்மைக்கு முன்னுரிமை அளித்து வரும் தேசியப் பதிவு இலாகா இது போன்ற விவகாரங்களில் தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் அதனை மேம்படுத்துவதற்கு முன் வைக்கப்படும் எந்தவொரு பரிந்துரையையும் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள உள்துறை அமைச்சு தயாராக இருப்பதாக சைஃபுடின் உறுதிக் கூறினார்.

WATCH OUR LATEST NEWS