பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்கச் செய்யலாம்

கோலாலம்பூர், ஜூலை.04-

நாட்டின் புதிய தலைமை நீதிபதியை நியமிப்பதிலும், அறிவிப்பதிலும் ஏற்படக்கூடிய காலத் தாமதம், ஒரு சுயேட்சை அமைப்பான நீதி பரிபாலனத்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையைப் பாதிக்கச் செய்து விடும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் அச்சம் தெரிவித்து இருப்பதைப் போல, தலைமை நீதிபதியை நியமிப்பதில் காலத் தாமதமும், வெளிப்படைத்தன்மைக் குறைபாடும் கூடாது.

அப்படி இருக்குமானால், கடந்த காலங்களில் நிலவி வந்ததைப் போல ஒரு சுயேட்சை அமைப்பான நீதி பரிபாலனத்துறையில் நாட்டின் நிர்வாகத் தரப்பில் உள்ளவர்களின் ஆதிக்கம் உள்ளதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி விடும் என்று சீர்திருத்தத்திற்கானத் தளமான சிஎஸ்ஓ பிளாட்ஃபோர்ம் ஃபோர் ரீஃபோர்ம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதே வேளையில், தலைமை நீதிபதியின் நியமனத்தைப் பிரதமரால் செய்யக்கூடாது என்று முன்னாள் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் கருத்தை அந்த அமைப்பு ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS