டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் பலி

வாஷிங்டன், ஜூலை.05-

அமெரிக்கா, டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கு மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயிருக்கின்றனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அமெரிக்காவில் இடியுடன் கூடிய பலத்த மழை கொட்டியதில், தென்-மத்திய டெக்சாஸில் உள்ள குவாடலூப் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் 13 பேர் பலியாயினர். இந்த வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட இடத்தில் முகாம் ஒன்று இருந்துள்ளது. இதனால் முகாமில் இருந்த 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

சான் அன்டோனியோவிலிருந்து வடமேற்கே சுமார் 105 கிமீ தொலைவில் உள்ள தென்-மத்திய டெக்சாஸ் ஹில் கன்ட்ரியில் அமைந்துள்ள கெர் கவுண்டியின் சில பகுதிகளுக்கு திடீர் வெள்ளம் காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. டெக்சாஸ் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

WATCH OUR LATEST NEWS