இளநீர் கடையில் கார் மோதியது, மூவர் காயம்

கோல கங்சார், ஜூலை.05-

கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இளநீர் கடையில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 11.35 மணியளவில் கோல கங்சார், ஜெர்லுன் அருகில் கோல கங்சார் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு அருகில் நிகழ்ந்தது.

புரோட்டொன் சாகா காரில் பயணித்த மூத்த தம்பதியரான 73 வயது நபரும், அவரின் 68 வயது மனைவியும் காயமுற்றனர். அந்த புரோட்டோன் சகா கார் , இளநீர்க் கடையை மட்டும் மோதவில்லை. எதிரே வந்த ஹொண்டா சிட்டி காரையும் மோதித் தள்ளியதாக போலீசாரின் பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதில் ஹொண்டா சிட்டி கார் ஓட்டுநரும் காயமுற்றார்.

WATCH OUR LATEST NEWS