சிரம்பான், ஜூலை.05-
சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நாளை ஜுலை 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெகுச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.
காலை 6.01 மணிக்கு ஆலய நித்திய பூஜையைத் தொடர்ந்து அம்மை அப்பர் கலச வழிபாடு, சிவவேள்ளி பேரொளி தரிசனம், அம்மை அப்பர் தீர்ததாவாரி, தீபாராதனை நடைபெறும்.
காலை 8.01 மணிக்கு பால்குட ஊர்வலம் நடைபெறும். காலை 11.01 மணிக்கு உச்சி கால சிறப்பு பூஜை, மகேஸ்வர பூஜை நடைபெறும். மதியம் 12.31 மணிக்கு அன்னதானம் மற்றும் பக்த பெருமக்களுக்கு திருநீறு பிரசாதம் வழங்கப்படும்.
மாலை 6.31 மணிக்கு சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு பஞ்சமூர்த்திகள் இரத ஊர்வலம் இடம் பெறும்.
தேவஸ்தானத்தின் இந்த வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவில், அன்பர்கள், அடியார்கள் திரளாகக் கலந்து கொண்டு, பால்குட நிகழ்விலும் பங்கேற்க வேண்டும் என்று உற்வச விழாவிற்கு தலைமையேற்கவிருக்கும் திருக்கயிலாய பரம்பரை ஶ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவண்ணாமலைக்கு நிகராக பல்வேறு சிறப்புகளைத் தாங்கிய நிலையில் மிகச் சக்தி வாய்ந்த பல அற்புதங்களைக் கொண்டுள்ள சித்தர்கள் வழிபட்ட ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு அருளாசியைப் பெற வேண்டும் என்று தேவஸ்தானம் சார்பில் சுவாமிகள் கேட்டுக் கொண்டுள்ளார்.