நடிகர் அஜித்குமாருக்கு சினிமாவைத் தவிர்த்து கார் பந்தயத்தின் மீது அலாதி பிரியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த விபத்தால் அஜித் கார் பந்தயம் பக்கம் திரும்பாமல் இருந்தார்.
ஆனால் 50 வயதில் பல கிலோ உடல் எடையைக் குறைத்து அவர் தற்போது கார் பந்தயங்களில் தன்னுடைய அணியைக் கலக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த விஷயமே அவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரியப் பெருமையைக் கொடுத்து இருக்கிறது.
அதே சமயம் அஜித்குமாருக்கு பத்மஸ்ரீ விருதும் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அஜித்துக்கு இன்னொரு கனவும் உள்ளதாம்.
ஃஎப்1, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் போன்ற ஹாலிவுட் படங்களில் நடிக்க அவர் தன்னுடைய விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். அஜித்தின் இந்த கனவு நிறைவேறுமா இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.