பெண் பயணி ஒருவரின் கைப்பேசியில் ‘RIP’ ஆர்ஐபி என்ற குறுஞ்செய்தி இருந்தமையால் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமொன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. அவ்விமானம் போர்ட்டோ ரிக்கோவில் உள்ள சான் ஜுயானில் இருந்து 193 பயணிகளுடன் அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்குச் சென்றுக் கொண்டிருந்தத்கு.
அப்போது விமானத்தில் பயணித்த பெண் ஒருவரின் கைப்பேசியில் ‘RIP’ என்ற குறுஞ்செய்தி வந்ததாக அவருக்கு அருகில் இருந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக விமானப் பணிப்பெண் ஒருவரை அழைத்த அருகில் இருந்த பெண், ‘RIP’ என்ற குறுஞ்செய்தி வெடிகுண்டு மிரட்டலாக இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர், அப்பணிப்பெண் விமானியிடம் தகவலைத் தெரிவிக்க, அவர் உடனே இஸ்லா வெர்டேவுக்கு விமானத்தைத் திருப்பி அவசரமாக அதனைத் தரையிறக்கினார். விசாரணை நடத்தியதில் தகவல் பெற்ற பெண்ணின் உறவினர் முந்தைய நாள் இறந்து விட்ட செய்தியும் அதற்காகத்தான் அவர் டல்லாஸ் செல்ல வேண்டியிருந்தது என்பதும் தெரிய வந்தது. எனவே குறுஞ்செய்தி பெற்ற பெண் மீது எந்த தவறும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.