மலேசியாவில் நாளை எஸ்விஎம் தேர்வு முடிவுகள் வெளியீடு: 15,897 மாணவர்கள் காத்திருப்பு

புத்ராஜெயா, ஜூலை.06-

2023ஆம் ஆண்டுப் பிரிவினருக்கான மலேசியத் தொழிற்கல்விச் சான்றிதழ் எஸ்விஎம் செமஸ்டர் 4 தேர்வு முடிவுகளை மலேசியக் கல்வி அமைச்சு நாளை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 86 தொழிற்கல்விக் கல்லூரிகளிலிருந்து மொத்தம் 15 ஆயிரத்து 897 மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதி இருக்கின்றனர். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை நாளை காலை 10 மணி முதல் தாங்கள் பயிலும் கல்லூரிகளிலோ அல்லது myresultsvm.moe.gov.my என்ற இணையதள இணைப்பிலோ பெற்றுக் கொள்ளலாம்.

WATCH OUR LATEST NEWS