அம்னோ தலைவர்கள் மீது அவதூறு: சட்ட நடவடிக்கை எடுக்கப் புதியச் சட்டச் செயலகம்

கோலாலம்பூர், ஜூலை.06-

அம்னோ தலைவர்கள் மீது அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க அம்னோ முடிவு செய்துள்ளது. இதற்காக, கட்சித் தலைமையகத்தில் ஒரு சட்டச் செயலகம் அமைக்கப்பட்டுள்ளதாகச் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஷ்ராஃப் வாஜ்டி டுசுகி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் கட்சித் தலைவர்கள் குறித்து பரப்பப்படும் தவறான தகவல்களைக் கண்காணித்து, தீவிரமாகச் செயல்பட இஃது உதவும் என்று அவர் கூறினார். மேலும், வெளிநாடு வாழ் வாக்காளர்களை அணுகுவதற்காக ஒரு புதிய துறையையும் உருவாக்க அம்னோ ஒப்புக் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS