காவல்துறைப் பணியாளர்கள் போலியான மருத்துவச் சான்றிதழ்கள் மூலம் விடுப்பு: பெரும் மோசடி அம்பலம்!

சுங்கை பட்டாணி, ஜூலை.06

அடிக்கடி விடுப்பு எடுக்கும் காவல்துறைப் பணியாளர்கள் குறித்த உள்விசாரணை, போலியான மருத்துவச் சான்றிதழ்களைத் தயாரித்து விற்பனை செய்யும் கும்பலைக் கண்டுபிடித்துள்ளது. கோல மூடா காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சுங்கை பட்டாணியில் உள்ள தாமான் சொங்க்கெட் இந்தா என்ற இடத்தில் வைத்து, ஒரு இதய நோயாளி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டதாக கோல மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

போலியானச் சான்றிதழ்களைக் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட போலி மருத்துவர் முத்திரைகள், மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தக் கும்பல், மருத்துவ பரிசோதனை இல்லாமலேயே ஒரு நாள் விடுமுறைக்கு 25 ரிங்கிட் முதல் 30 ரிங்கிட் வரை பெற்றுக் கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு ஊழியர்களுக்கும் காவல்துறைப் பணியாளர்களுக்கும் போலி மருத்துவச் சான்றிதழ்களை விற்று வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS