கோலாலம்பூர், ஜூலை.06-
கேஎல்சிசி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறவுள்ள 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடும், அதனுடன் தொடர்புடைய கூட்டங்களில், ஐந்து முக்கிய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளன. இந்த ஆவணங்களில் 58வது ஆசியான் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிக்கையும் பல்வேறு ஆசியான் கூட்டங்களின் தலைவர் அறிக்கைகளும் அடங்கும். ஆசியான் தலைவர்களால் மே மாதம் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஆசியானும் அதன் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை இந்த மாநாடு முன்னெடுத்துச் செல்லும். சுமார் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு, வட்டார ஒத்துழைப்புக்கும் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியத் தளமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.