பிரதமர் அன்வாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: ‘துருன் அன்வார்’ பேரணியில் 300 பேர் திரண்டனர்!

ஷா ஆலாம், ஜூலை.06-

சிலாங்கூர், ஷா ஆலாம் செக்‌ஷன் 9 வாகன நிறுத்துமிடத்தில் இன்று காலை நடைபெற்ற துருன் அன்வார் பேரணியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டு, பிரதமர் அன்வார் இப்ராஹிமின் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஜூலை 1 ஆம் தேதி முதல் நடப்புக்கு வந்த சேவை, விற்பனை வரி, அதன் விளைவாக அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

‘அன்வார் பதவி விலக வேண்டும்’, ‘மக்கள் சிரமப்படுகிறார்கள்’, ‘மக்கள் சுமையால் பாதிக்கப்படுகிறார்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்திச் சென்றனர். மேலும், வரும் ஜூலை 26 ஆம் தேதி டத்தாரான் மெர்டேகாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான பேரணிக்கு இஃது ஒரு முன்னோட்டமே என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS