மாதுவுக்கும், காதலனுக்கும் 7 நாள் தடுப்புக் காவல்

அலோர் காஜா, ஜூலை.07-

தனது 15 மாதக் கைக்குழந்தையைச் சித்ரவதை செய்து கொன்றதாக நம்பப்படும் மாதுவும், அவரின் காதலனும் விசாரணைக்கு ஏதுவாக 7 நாள் போலீஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மலாக்கா, அலோர் காஜாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் நேற்று அந்த ஜோடியினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் மலாக்கா நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் டாக்டர் தியோ ஷு யீ முன்னிலையில் நிறுத்தப்பட்டு, தடுப்புக் காவல் அனுமதியைப் போலீசார் பெற்றனர்.

அவ்விருவரும் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

புலாவ் செபாங், பண்டார் செட்டலிட்டில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் அந்த 15 வயது பெண் குழந்தையின் பிட்டத்தில் கடுமையானக் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS