கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை அடுத்து ‘காந்தாரா’ திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது ‘காந்தாரா-2’ திரைப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் வேலை பார்த்த சிலர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். காந்தாரா திரைப்படத்தால் தான் இவ்வாறு நடக்கிறது என பேச்சுகள் திரை வட்டாரத்தில் உலவி வந்தது. இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்திற்கு அஜேஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் படம் வெளியிடப்படும் தேதியை படக் குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.