இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி, ஜூலை.07-

விசாரணைக்கு அழைக்கப்படும் பெண்களிடம் கையூட்டாகப் பாலியல் உறவு கோருவதாகவும், பெண்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்தததாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோல கெடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த இன்னும் திருமணம் ஆகாத அந்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக கடந்த ஜுலை 3, 4 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட போலீஸ் புகார் மற்றும் எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையில் அந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த இன்ஸ்பெக்டரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் தெரிவித்தார்.

போலீஸ் உயர் அதிகாரி என்ற தனது அந்தஸ்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டப் பெண்களிடம் பாலியல் உறவு கோரியிருப்பதாக அந்த அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS