பஞ்சாப்பில் பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி, 30 பேர் காயம்

சண்டிகர், ஜூலை.07-

பஞ்சாபில் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டம் ஹாஜிபூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணியை மேற்கொண்டனர்.

விபத்தில் எண்மர் பலியாயினர். படுகாயமுற்ற 30 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முதற்கட்ட விசாரணையில் பேருந்தை அதி விரைவாக இயக்கியதால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்பது தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS