ஷா ஆலாம், ஜூலை.07-
தானும் தனது மனைவிமார்கள் மற்றும் இதர பெண்களுடன் உறவு கொண்ட ஆபாச வீடியோப் படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஒரு சமயப் போதகரின் நான்கு மனைவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த நான்கு பெண்களிடம் கடந்த வாரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த சமயப் போதகர் தற்போது போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட போதிலும் அவர் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஏசிபி முகமட் இக்பால் குறிப்பிட்டார்.