ஜார்ஜ்டவுன், ஜூலை.07-
பினாங்கு கொடி மலைப் பகுதியில் சில நாய்கள் இறந்து கிடந்தது குறித்து கால்நடை இலாகா ஆராய்ந்து வருகிறது. அந்த நாய்களுக்கு விஷமிடப்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
நாய்களின் இறப்பிற்கு உண்மையானக் காரணத்தைக் கண்டறிவதற்கு அவற்றின் உடல்கள் ஆய்வுக் கூடத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக பினாங்கு மாநில கால்நடை இலாகா இயக்குநர் டாக்டர் பானு ரெஜாப் தெரிவித்தார்.
அந்த நாய்களுக்கு விஷமிடப்பட்டதற்கான எந்தவொரு தடயங்களும் மீட்கப்படவில்லை என்றாலும் அதற்கான சாத்தியம் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.