22 மாணவர்களை ஏற்றி வந்த வேன் விபத்துக்குள்ளானது

ஜோகூர் பாரு, ஜூலை.07-

22 மாணவர்களை ஏற்றி வந்த பள்ளி வேன் ஒன்று டிரெய்லர் லோரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவம் இன்று பிற்பகலில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ஜோகூர் பாரு, பண்டார் டத்தோ ஓனிற்கு வெளியேறும் சாலையில் நிகழ்ந்தது.

பிற்பகல் 1.10 மணியளவில் இவ்விபத்து குறித்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதைத் தொடர்ந்து தெப்ராவ் மற்றும் கெம்பாஸ் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து பத்து வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அதன் கமாண்டர் முகமட் அஸிஸி ஸாகாரியா தெரிவித்தார்.

இதில் வேன் ஓட்டுநர் வாகனத்தில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய வேளையில், மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர். முன்னதாக இதர மாணவர்கள், பொதுமக்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஓட்டுநர், சிறப்பு சாதனங்கள் பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அவர் கூறினார்.

WATCH OUR LATEST NEWS