ஆஸ்ட்ரோவில் வலிமை மற்றும் தைரியம் பற்றிய புதிய நாடகத் தொடர் ‘ஆதிரா’

கோலாலம்பூர், ஜூலை.09-

மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, பெண்களுக்கு அதிகாரமளித்தலை முன்னிலைப்படுத்தும் ‘ஆதிரா’ எனும் புதியத் தொடரை ஒளிபரப்பவிருக்கிறது. ஜூலை 14, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் ஆஸ்ட்ரோ தனது விண்மீன் பிரத்தியேகத் தொடரான ​​ஆதிராவை ஒளிபரப்புகிறது.

 ‘ஷுர்கா இது புக்கான் முடா’ எனும் பிரபல உள்ளூர் மலாய்த் தொடரைத் தழுவி உருவாக்கப்பட்ட ஆதிரா, நகர்ப்புற மற்றும் ஆடம்பர வாழ்க்கை முறையின் அடிப்படையில் மறு கற்பனைச் செய்யப்பட்டு, குடும்ப வன்முறை உட்பட அனைத்து வகையான வன்முறைகளுக்கும் துஷ்பிரயோகங்களுக்கும் எதிராகப் பெண்கள் குரல் கொடுக்கவும் செயல்படவும் வேண்டும் என்ற முக்கியக் கருத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைதியாகத் துன்பப்படுவதை விட உதவி நாடுவதை இத்தொடர் ஊக்குவிக்கிறது. ஆர். அசிசான் இத்தொடரை இயக்கியிருக்கிறார். வழக்கமான நடைமுறையை உடைத்து, பாரம்பரியப் பாலினப் பாத்திரங்களை மீறிச், சவால்களைக் கடந்து, நிதிச் சுதந்திரத்தை நிலைநிறுத்தும் ஒரு துணிச்சலான மற்றும் உறுதியானக் கதாபாத்திரமாக ஆதிரா உருவாகியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கையில் எதிர்மறையான மாற்றங்களை எதிர்கொள்ளும் ஒரு வலிமையானச், சுதந்திரமான பெண்ணின் பயணத்தை ஆதிரா சித்தரிக்கிறது.

இத்தொடரில் முன்னணி கதாப்பாத்திரத்தில் ரூபினி சம்பந்தன் நடித்திருக்கிறார். அவருடன் தீபன் ஜி, சாரா செல்வா, கவிதா சின்யா, கார்த்திக் ஜெய், அங்கயர் கன்னி, பிரிசில்லா நாயர் உட்பட பல பிரபல உள்ளூர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  கெரிஸ் மீடியா நெட்வொர்க்ஸ் சென்டிரியான் பெர்ஹாட்டிலிருந்து எலினா தோமஸ் இத்தொடரைத் தயாரித்திருக்கிறார்.

ஆதிரா தொடரின் முதல் ஒளிபரப்பை ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாகத் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு களிக்கலாம்.

WATCH OUR LATEST NEWS