கோலாலம்பூர், ஜூலை.09-
திருக்கயிலாயப் பரம்பரை பேரூராதீனம், தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாரின் தலைமையில் திருக்கயிலைத் திருத்தலப் பயணம், வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 13 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பூவுலகப் பருக் கயிலை என சைவர்களால், சிவனடியார்களால் போற்றப்படும் மிக உயர்ந்த சிவத் தலமான கயிலை மலைக்கு, குரு அருளும் திருவருளும் முன் நிற்க, திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் பேரூர் ஆதினம் 25 ஆம் குருமகா சந்நிதானம் தவத்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் தலைமையில் திருத்தலப் பயணத்தில் பங்கு கொள்கின்றவர்களுக்கு, அடிகளாரின் ஆன்மீக நடவடிக்கைகளில் பங்கு கொள்ள அற்புத வாய்ப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிடைப்பதற்கு அரிதான ஒரு வாய்ப்பு நமது தவத்திரு அடிகளாருடன் திருத்தலப் பயணம் மேற்கொள்வது. ஆதலால் அன்பர் பெருமக்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கயிலைமலையானின் திருவருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றனர் மையாத்ரா எம்பயர் டிராவல் & டூர்ஸ் குழுவினர்.

இத்திருக்கயிலைத் பயணத்தில் பங்கு கொள்ள ஆர்வம் கொண்டவர்கள் கீழ்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மணி, +6012- 3073565 ( மலேசியா )
பரமேஸ்வரி, +6011– 33561877 ( மலேசியா )
கணேஷ், +919865055566 ( இந்தியா )